நாட்டுக்கே உழைத்த வல்லவர் –டாக்டர் அம்பேத்கர்             
                                                                                                  பேரா.முனைவர் க கணேசன், கொட்டாரம்

                 தொகையறா                         
சாதியின் பிறப்பிடத்தை
சரியாக கண்டவரு
ஆரிய மனுதந்திரத்தின்
ஆணிவேரை அசைத்தவரு
சமத்துவ சூரியனாய்
சட்ட ஒளி தந்தவரை
சாதியெனும் கைக்குடைக்குள்
மறைத்திடல் முடியாது
                     பல்லவி     
யாரு யாரு அம்பேத்கரு-இந்த
நாட்டுக்கே உழைத்த வல்லவரு       ( யாரு)
                      சரணம் 1  
வேளாண் நிலத்தையெல்லாம் அரசு உடைமையாக்கி
கூட்டுப்பண்ணை விவசாயம் வேண்டுமென்றார்
அனைவரும் உழைத்து உற்பத்தியை பெருக்கி
ஏற்றத் தாழ்வு அரக்கனை வீழ்த்திடச் சொன்னார்-இங்கு
ஏற்றத் தாழ்வு அரக்கனை வீழ்த்திடச் சொன்னார்
            சோசலிச கனவு மனதினிலே
             சுயநலம் காலின் தூசிபோலே                       (யாரு)
                            2
எட்டு மணிநேர வேலைச் சட்டம்போட்டு
மேதினத்தின் தியாகத்துக்கு மகிமை தந்தார்
தொழிலாளர் அவலங்கள் போக்கிடச் செய்யும்
வேலைநிறுத்த உரிமையை உறுதி செய்தார்-நாட்டில்
வேலைநிறுத்த உரிமையை உறுதி செய்தார்
           தனியார் உடைமையை ஒழித்திடவே
           அரசே தொழிற்சாலை நடத்தச் சொன்னார்     (யாரு)
                               3
பிற்படுத்தப் பட்டோர் கல்வி வேலைக்கு
பாராளுமன்றத்தில் முழக்கமிட்டார்
மகப்பேறு விடுப்பு சட்டம் போட்டு
மகளிரின் துன்பத்தை துடைத்தெறிந்தார்-இங்கு
மகளிரின் துன்பத்தை துடைத்தெறிந்தார்
            பெண்ணுரிமை மசோதா தோற்றதாலே
            மந்திரி பதவியை தூக்கியெறிந்தார்                 (யாரு)
                              4
கொள்ளை அடித்திடும் தனியார் வங்கிகளை
நாட்டுடைமையாக்கக் குரல் கொடுத்தார்
எல் ஐ சியை அரசின் ஏகபோகமாக்கி
அனைவருக்கும் காப்பீடு போடச் சொன்னார்- வயது
வந்தோருக்கு காப்பீடு போடச் சொன்னார்
          இந்திய நதிகள் அனைத்தையுமே
          தேசத்தின் சொத்தாக ஆக்கச் சொன்னார்         (யாரு)
                               5
சாதி எனும் பேயை சாய்த்து ஒழித்திட
புறமண முறையே சிறந்ததென்றார்
ஆதியிலே உதித்தமொழி தமிழ்மோழிதா னென்று
ஆராய்ந்து முடிவுரை எழுதியவர்-ஆதி
நாகர்கள் பேச்சுமோழி தமிழேயென்றார்
        சனாதன முறையை மோதி மிதித்தே
        சமதர்ம புத்தத்தை தழுவியவர்                               (யாரு)
                               6
அதிக பலத்துடனே சோசலிசவாதிகள்
ஆட்சியைப் பிடிப்பார்க்கள் என்றே சொன்னார்
சாதீயம் ஒழித்த சமத்துவமே
இந்தியாவின் சோசலிசம் என்றே சொன்னார்
       அவர்களால் சமத்துவம் வலிமைபெறும்-என்று
        ஆவேசமாகவே கர்ஜித்தவர்                                           (யாரு)




Comments

Popular posts from this blog

கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி அய்யன்காளி

நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் ஆர் பி மோரே டாக்டர் பி ஆர் அம்பேத்கர்