Posts

நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் ஆர் பி மோரே டாக்டர் பி ஆர் அம்பேத்கர்

                                          நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் .                                          டாக்டர் அம்பேத்கர் - ஆர் பி மோரே        (சமூக- வர்க்கப் போராட்டத்தின் இணைப்புச் சங்கிலி திசைகாட்டி)                                                   ஆங்கிலத்தில்; சத்தியேந்திர மோரே, சுபோத் மோரே                                                 தமிழில்; பேரா. முனைவர் க கணேசன், கொட்டாரம்        நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என்று தலைப்பிட்டு, மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஆங்கில ஏடான பியூப்பிள்ஸ் டெமாக்ரஸி மார்ச்2003ல் வெளியிடப்பட்ட கட்டுரையை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து படித்தபோது புதிய சிந்தனையைக் கிளறியது. மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கும் தோழர் ராமச்சந்திர பாபாஜி மோரே அவர்களுக்கும் உருவாகி, வளர்ந்து, இறுதிவரை தொடர்ந்த வரலாறு என்பது இருவருக்குமிடையேயான தனிப்பட்ட உறவோ, நட்போ என்று சுருக்கிப் பார்க்க முடியவில்லை.         இருவரின் ஒட்டுமொத்த சிந்தனை   செயல்பாடுகளை உற்றுநோக்கும் போது,சமூக ஒடுக்குமுறைக்கெதிராகவும்,வர்க்கச் சுரண்டலுக்கெதிராகவும

கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி அய்யன்காளி

         கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி   அய்யன்காளி.                                                                  பேரா.முனைவர் க கணேசன்.கொட்டாரம் திருவிதாங்கூர் (கேரளா)நாடு மக்களான நாகர்கள், புலையர்கள், பறையர்கள், மற்றும் பல்வேறு மலைப் பழங்குடியினர், அதன்பின் வந்த நாடார்கள்,ஈழவர்கள் அனைவரும் அவரவர் தொழில் அடிப்படையில் தத்தம் தொழிலைச் செய்து நல்லிணக்கத்துடன் ஊர்ச் சமுதாயங்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதியோடு உறவு கொள்வதில் எந்தப பிரச்னையும் இல்லை. தொழில் அடிப்படையில் எந்தச் சாதியினரும எந்தவொரு இகழ்ச்சிக்கும் உட்படுத்தப் படவில்லை. இந்தியாவின் தொன்மையான மதமாகிய சமணமதம் கி மு மூன்றாம் நூற்றாண்டில் கேரளத்தில் நுழைந்தது. கி மு322 –கி மு298 காலத்தில் சமண சமயத் தலைவராகவும் அரசனுமான சந்திரகுப்தருக்கு மதகுருவான பத்ரபாகு (கி மு317- கி மு217) எனும் சமணத் துறவியால் தென்னிந்தியாவில் பரப்பப்பட்டதே சமண மதம். கி பி 10 ஆம் நூற்றாண்டில் பிராமணியம் திருவிதாங்கூரில் நுழைந்த பின்னர் நிலைமை முற்றிலும் மாறியது. சமணமதம் தழைத்தோங்கிய காலத்தில், அது மன்னர்களுக்கு கட்டுப்ப